Skip to main content

'பணியாத ஆளு பாரு...' - வேறு ரூட்டில் ரஜினி

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

jailer third single released

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

 

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் 'காவாலா' மற்றும் 'ஹுக்கும்' (Hukum) பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தெலுங்கு பதிப்பான 'காவாலி' பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

 

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஜூஜூபி'(Jujubee) லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில் வில்லனை ரிவெஞ்ச் எடுக்கும் ரஜினி, அதற்காகத் தயாராகும் போது வருகிற பாடல்போல் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க ரஜினி கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

இப்பாடலைப் பாடகி தீ, அனிருத் மற்றும் அனந்த கிருஷ்ணன் பாட  'ஹுக்கும்' பாடல் மூலம் பிரபலமான பாடலாசிரியர் சூப்பர் சுபு வரிகள் எழுதியுள்ளார். பாடலில் வரும் 'பணியாத ஆளு பாரு...பரியேறும் சாறு. புரிஞ்சிடாத பாதை நூறு...இவன் ரூட்டே வேறு' என்ற வரிகள் ரசிக்க வைக்கிறது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்