Skip to main content

'எண்ட் கார்டு வச்சா... ட்ரெண்டா மாத்தி வைப்பான்...' - ஜெயிலரில் ரஜினி

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

jailer second single hukum released

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

 

ad

 

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஹுக்கும்' (Hukum) லிரிக் வீடியோ இன்று வெளியாகும் என முன்பே தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. கதையில் வில்லனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து விரிவாக இப்பாடல் எடுத்துரைக்கிறது. மேலும் ரஜினியின் பன்ச் வசனம், பாடல்களில் இடம்பெறுவதால் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சூப்பர் சுபு என்பவர் வரிகள் எழுத அனிருத் பாடியுள்ளார். பாடலில் வரும், எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்... பெயர தூக்க நாலு பேரு... பட்டத்தை பறிக்க நூறு பேரு... குட்டி செவுத்த எட்டி பார்த்தா... உசுர கொடுக்க கோடி பேரு... எண்ட் கார்டு வச்சா... இவன் ட்ரெண்டா மாத்தி வைப்பான்...உள்ளிட்ட வரிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்