Skip to main content

ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு உதவிய ஹ்ரித்திக் ரோஷன்...

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது.மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.

 

hrithik roshan



ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் பல தொண்டு நிறுவனங்கள்,பிரபலங்கள் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் 'அக்‌ஷய பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1.2 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க உதவி செய்துள்ளார். 

இதுகுறித்து 'அக்‌ஷய பாத்ரா' வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''உதவி தேவைப்படும் அனைத்து இந்திய மக்களுக்கும் உணவு வழங்க உடனடியாக முன்வந்த ஹ்ரித்திக் ரோஷனுக்கு தலைவணங்குகிறோம்.உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்