Skip to main content

"எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன்" - கவுண்டமணி எச்சரிக்கை!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
vgdsgsgs

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி கரோனா சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. "கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்