Skip to main content

கிராமத்து லுக்கிற்கு மாறிய பிக் பாஸ் பிரபலம்

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Ganesh Venkatram changed to  village look

 

தமிழ் சினிமாவில் அபியும், நானும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கணேஷ்  வெங்கட்ராம்   கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னை போல் ஒருவன், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து நடிகர் கணேஷ்  வெங்கட்ராம் 'உன் பார்வையில்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழ், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில்  வெளியாக உள்ளது. 

 

ad

 

ஸ்டைலான சிட்டி லுக்கில்  இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தற்போது கிராமத்து இளைஞன் போன்று புதுமையான தோற்றத்திற்கு மாறி அசத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்," இந்த கொரோனா லாக்டவுன் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. சினிமா தன்னையே புதிப்பித்து கொண்டிருக்கிறது. 10 வருடங்களை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். சினிமாவில் என்னுடன் பயணிக்கும் நண்பர்களுடன் ஆலோசித்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்த்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். இந்த புதிய லுக்,  தமிழ் திரைப் படைப்பாளிகள் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் யோசித்து பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக் கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி  பார்க்கும் நேரத்தில்,  வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும் " என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...