தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மிஷ்கின் தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்' சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார்.
இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் டப்பிங் பணிகளை ஆண்ட்ரியா முடித்துள்ளார். இப்படத்திற்காக முதல் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பான வீடியோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ள ஆண்ட்ரியா தற்போது தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த புது முயற்சியை எடுத்துள்ளார். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.