Skip to main content

“ரெடியா இருங்க, சொல்ல வேண்டியது நிறைய இருக்கு”- சஸ்பென்ஸ் வைத்த ஃபகத் ஃபாசில்

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

fahad fazil talk about pushpa 3

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். செம்மர மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை படக்குழு அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. 

 

இந்நிலையில் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஃபகத், “முதலில் புஷ்பா படத்தின் கதையை வெப் சீரியஸாக எடுக்கத்தான் இயக்குநர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார். முதலில் என்னிடம் கதை சொல்லும் போது ’புஷ்பா 2’ எடுக்கும் எண்ணம் எல்லாம் இயக்குநர் சுகுமாருக்கு இல்லை. என்னை வைத்து காவல் நிலைய காட்சிகளை படமாக்கிய பின்புதான் அவருக்கு புஷ்பா 2 எடுக்கும் எண்ணம் உதித்தது. சமீபத்தில் இயக்குநருடன் பேசும் போது புஷ்பா படத்தின் கதை அதிகம் இருப்பதாலும், செம்மரக் கடத்தலை மிக ஆழமாக சொல்ல இருப்பதாலும் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள் என கூறினார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஃபகத் ஃபாசில் படம் 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
fahad faasil aavesham movie enters 100 crore club

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், சஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். நஸ்ரியா நசிம் மற்றும் அன்வர் ரஷீத் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் நடிப்பை சமந்தா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றார்.  

அதன் காரணமாக வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் ஆவேஷம் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 7வது படமாக இப்படம் இருக்கிறது. இதற்கு முன்பாக மஞ்சும்மல் பாய்ஸ்,  2018 , புலிமுருகன், ஆடுஜீவிதம், பிரேமலு, லூசிஃபர் உள்ளிட்ட படங்கள் இணைந்தது. 

fahad faasil aavesham movie enters 100 crore club

சமீப காலமாக மலையாள சினிமாக்கள் கேரளாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட்படங்களாக வெளியாகி வருகிறது. இந்த ஹிட் லிஸ்டில் தற்போது ஆவேஷமும் இணைந்துள்ளது. அதோடு ஃபகத் ஃபாசில் நடித்த முதல் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. 

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார்.