Skip to main content

திரைப்படமாகும் ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

elon musk biopic updates

 

உலகின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தின் சிஇஒ-வாக இருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு ‘எலான் மஸ்க்' என்ற அவரது பெயரில் கடந்த செப்டம்பரில் புத்தகமாக வெளியானது. இதை பிரபல எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எழுதியிருந்தார். இவர் ஏற்கனவே ஆப்பிள் சிஇஒ-வாக இருந்து மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை புத்தமாக எழுதியிருந்தார். இதை மையமாக வைத்து 2015ல் ஸ்டீவ் ஜாப்ஸின் பயோகிராபி வெளியானது. 

 

இந்த நிலையில் ‘எலான் மஸ்க்’ வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. வால்டர் ஐசக்சன் எழுதிய புத்தகத்தை வைத்து உருவாகும் இப்படத்தை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 'பிளாக் ஸ்வான்' (Black Swan), 'தி வேள்’ (The Whale) உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் தி வேள் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னணி பிரபலங்களுடன் எலான் மஸ்கின் பயோ-பிக் உருவாகவுள்ளதாகத் தெரியும் சூழலில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Elon Musk's visit is suddenly canceled!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.