Skip to main content

“படமெடுக்க நிலத்தை விற்று பணம் கொடுத்திருக்கிறார்” - இயக்குநர் லிங்குசாமி

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

Director Lingusamy Speech at beginning movie audio launch

 

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் பிகினிங். ஆசியாவின் முதல் Split Screen திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது...

 

மிகவும் திறமையான இயக்குநர், நுணுக்கமான அழகான இயக்குநர் என்பது இப்படத்தின் இயக்குநர் ஜெகன் விஜயாவின் பேச்சிலேயே தெரிகிறது. இப்படம் எடுப்பதற்கு இயக்குநர் ஜெகனின் அம்மா தன் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று எனக்கு தெரிந்ததும், இப்படத்தின் ஆதாரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது என்று உணர்ந்தேன். உனது அம்மாவும் எனது அம்மாவும் வேறு வேறு அல்ல, அது ஒரே உணர்வு தான். ஒரு சரியான நபருக்குத் துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்தத் துறையை விட்டுச் செல்ல மாட்டீர்கள். இந்தத் துறையும் உங்களை விடாது.

 

இப்படத்தை பிருந்தா சாரதியும் எடிட்டர் லெனினும் பார்த்துவிட்டு, இது விருது படமோ ஓடிடி படமோ கிடையாது. திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை 3 திரையரங்குகளில் உணர்ந்தேன். அதே உணர்வு இப்படம் வெளியானதும் எல்லோருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ் நிறுவனங்கள் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். ஒரே எண்ணத்தில் அனைவரும் சேர்ந்த கூட்டு முயற்சி தான் வெற்றியாகும். இதுவரை வெற்றிபெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அது நிகழ்ந்துள்ளது.

 

இப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டினால் எல்லோரும் இயக்குநர்தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவனப் படங்களிலும் உங்களைப் பயன்படுத்துவேன். 

 

 

சார்ந்த செய்திகள்