Skip to main content

கிரேசி மோகனின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.    கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.
 

crazy mohan

 

 

தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 

இந்நிலையில், நாளை காலை 10:30 மணிக்கு மந்தவெளி இல்லத்திலிருந்து கிரேசி மோகன் உடல் இறுதி சடங்கிற்காக பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்