Skip to main content

பிரபு, ராம்குமார் மீதான புகார்; மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Complaint against Prabhu, Ramkumar; The court dismissed the petition

 

60களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருக்கு  ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். ஏராளமான படங்களில் நடித்த சிவாஜி கணேசன் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு அவர்களது வாரிசுகளான ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர். 

 

இதனிடையே தந்தையின் சொத்தில் தங்களுக்கு பங்கு தராமல் பிரபுவும், ராம் குமாரும் ஏமாற்றிவிட்டதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில் "சாந்தி திரையரங்க பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை பிரபுவும், ராம் குமாரும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் பிரதான வழக்கு முடியும் வரை சொத்துக்களை விற்க இடைக்கால தடை விதிக்க கோரி சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடன.

 

இந்த கூடுதல் மனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு,  பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பான சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது. நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும்  2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது. இந்நிலையில் கூடுதல் மனுக்கள் மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, அக்கூடுதல் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்