Skip to main content

லட்சுமிராய் பட ட்ரைலரை வெளியிட்ட நடிகர் தனுஷ்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Raai Laxmi

 

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் லட்சுமி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிண்ட்ரெல்லா'. பேண்டஸி ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2018ஆம் ஆண்டே வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகளை நிறைவுசெய்வதில் சிக்கல் எழுந்தது. தற்போது படத்தின் மொத்த பணிகளும் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி  'சிண்ட்ரெல்லா' திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'சிண்ட்ரெல்லா' பட ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழ்த்துக் கூறிய ராய் லட்சுமியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

raai laxmi post viral on social media

 

தமிழில் காஞ்சனா, மங்காத்தா, நான் அவன் இல்லை, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ராய் லட்சுமி மலையாளம், கன்னடம்,தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்   

 

இந்நிலையில் இந்திய குடியரசு தினமான நேற்று தனது புகைப்படத்தைப் பகிர்ந்து சுதந்திர தின விழா வாழ்த்து எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அவரைக் கமெண்டில் வறுத்தெடுக்கத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து உஷாரான ராய் லட்சுமி தனது பதிவில் குடியரசு தின விழா வாழ்த்துகள் என மாற்றினார்.

 

 

Next Story

நடிகை ராய் லட்சுமிக்கு அமீரகம் அளித்த அங்கீகாரம்

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Raai Laxmi has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 

 

சமீபத்தில் நடிகை த்ரிஷா, அமலா பால் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகை ராய் லட்சுமிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ராய் லட்சுமி, கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.