‘டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் டெனட் படத்தில் நடித்துள்ளார். கரோனா தோற்றால் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், 'டெனட்' திரைப்படம் நாளை இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதனையொட்டி, படத்தின் இயக்குனர் கிறிஸ்டஃபர் நோலன், இந்திய ரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார். வார்னர் ப்ரோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றிய, கிறிஸ்டஃபர் நோலன், இந்திய ரசிகர்கள் டெனட் படத்தை பார்க்கப்போவதை நினைத்து த்ரில்லாக உணர்வதாக கூறியுள்ளார்.
Christopher Nolan has a special message for audiences in India.
#Tenet In Cinemas Tomorrow.
#ChristopherNolan pic.twitter.com/Fhtr8ZYEq2
— Warner Bros. India (@warnerbrosindia) December 3, 2020
கிறிஸ்டஃபர் நோலன், அந்த வீடியோவில், "நான் இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஹலோ சொல்ல விரும்புகிறேன். டெனட் திரைப்படத்தை, நீங்கள் பெரிய திரையில் பார்க்கபோவதை நினைத்து த்ரில்லாக உணர்கிறேன். நாங்கள் டெனட் படத்தை, மும்பை உள்ளிட்ட உலகின் பிரமிப்பான இடங்களில், பெரிய திரைவடிவமான ஐ-மேக்ஸ் வடிவில் எடுத்துள்ளோம். படத்தின் சிறப்பான காட்சிகளாக நான் கருதும் காட்சிகளில் சிலவற்றை மும்பையில் எடுக்க முடிந்தது. இந்தியாவில் படமெடுத்த தருணங்கள் மிகவும் அற்புதமான ஒன்றாக அமைந்தன. நீங்கள் படத்தை பெரிய திரையில் பார்க்கப்போவது எனக்கு மிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு படம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.