Skip to main content

‘பிகில் ஸ்பெஷல் ஷோ எப்போ’ பிரபல ஹாலிவுட் இயக்குனர் ட்விட்டரில் கேள்வி

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான மூன்றாவது படமான 'பிகில்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு நாட்களில் ட்ரைலரை 22 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.
 

vijay

 

 

மேலும் 1.8 மில்லியன் லைக்குகள் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்குகள் பெற்ற இரண்டாவது ட்ரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது. முதல் இடத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜீரோ' படத்தின் ட்ரைலர் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய மொழி படங்களிளிலேயே 'பிகில்' படத்தின் ட்ரைலர் அதிக லைக்குகளை பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ட்ரைலரை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில்,  ‘பிகில்’ ட்ரைலரை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில்,  “பிகில் ட்ரைலர் சிறப்பாக இருந்தது. படம் எப்போது அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும்?. அமெரிக்காவில் சிறப்பு காட்சி திரையிடப்படுகின்றதா? போன்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த அட்லீ, சிறப்பு காட்சி குறித்த தகவலை நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்