Skip to main content

'இளையராஜா 75 விழா மட்டும் போதாது...' - கே.பாக்யராஜ் 

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
kb

 

கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச்.வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியபோது...

"கரு. பழனியப்பன் சரவணனின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார். சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள். ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் யுகபாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம். இளையராஜாவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்