Skip to main content

சேரிகள் 'லோக்கல்' இல்லை...அது நம் 'நேட்டிவிட்டி' - பாபா பாஸ்கர் 

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள குப்பத்து ராஜா ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி மற்றும் பார்த்திபன் ஆகியோருடன், யோகிபாபு மற்றும் பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான குப்பத்து ராஜா ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இப்பட இயக்குனர் பாபா பாஸ்கர் கூறும்போது....

 

kuppathu raja

 

"உண்மையில் நான் சேரிகளை 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள். மேலும் குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் யூடியூபில் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளது. டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்