Skip to main content

மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Ashwini Puneeth received honorary doctorate behalf Puneeth Rajkumar

 

கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் 29/10/2021 அன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்கியது.

 

திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளை பெற்றதோடு, சமுதாயத்திலும் கண் தானம், ஏழைகளுக்கு உதவுதல், இலவச பள்ளிக்கூடம், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம்  என அவரின் செயலால் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வருகிறார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக மைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இன்று(22.3.2022) 102 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மறைந்த புனித் ராஜ்குமாருக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்