Skip to main content

'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் வெளியீடு!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

sundar c

 

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை காலை 11 மணிக்கு படத்தின் போஸ்டரும் மோஷன் போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்