
இந்திய திரைப்படத் துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ. ஆர் ரஹ்மான், தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதனிடையே உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடிகளால் மிகவும் வருந்தியதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த குளறுபடிகளால் கலந்துகொள்ளாமல் போன ரசிகர்களுக்கு பணம் திருப்பி அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது மீண்டும் படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு முன்பாக தான் நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.