Skip to main content

முழுவீச்சில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

rajini

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, படக்குழு சென்னை திரும்பியது.

 

பின் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சில தினங்களுக்கு முன் மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. தற்போது, ஹைதராபாத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியும் இயக்குநர் சிவாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்