Skip to main content

அனுமதியின்றி புகைப்படம் வெளியீடு - ஆலியா பட் ஆவேசம்; தொடர்பு கொண்ட போலீஸ்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Alia Bhatt photo issue

 

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஆலியா பட் தற்போது இந்தி மற்றும் ஹாலிவுட் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். மும்பையில் தனது வீட்டில் வசித்து வரும் ஆலியா, தான் வீட்டினுள் இருக்கும் போது யாரோ இரண்டு ஆண்கள் தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதிய நேரத்தில் நான் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாகத் தோன்றியது. உடனே நிமர்ந்து பார்க்கும் போது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து இரண்டு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது எந்த உலகில் அனுமதிக்கப்படுகிறது? இது தனிநபர் மீதான அத்துமீறல். நீங்கள் கடக்க முடியாத ஒரு எல்லை உள்ளது. இன்று அனைத்து எல்லைகளும் கடந்துவிடப் படுகின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மும்பை காவல்துறையினரையும் அந்தப் பதிவில் டேக் செய்திருந்தார். 

 

இந்த விவகாரத்தில் ஆலியா பட்டிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அனுஷ்கா ஷர்மா, "எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால், குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்" எனப் பதிவிட்டிருந்தார். மேலும் அர்ஜுன் கபூர், கரண் ஜோஹர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் ஆலியா பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தனர். 

 

இதனைத் தொடர்ந்து மும்பை காவல்துறை நடிகை ஆலியா பட்டை தொடர்பு கொண்டு புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக புகார் அளிக்கும்படி கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனது குழு தொடர்பில் இருப்பதாக ஆலியா பட் பதிலளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - விஜய்யின் படத்திற்கு டாப் ஹீரோயின்கள் பரிந்துரை

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
vijay 69 heroine update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது. 

vijay 69 heroine update

இப்படத்தை அடுத்து விஜய்யின் கடைசி படமாக உருவாகும் அவரது 69ஆவது படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay 69 heroine update

இதனிடையே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

“பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
BJP is the biggest threat to India Chief Minister MK Stalin

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.