Skip to main content

கலைஞர் - விஜய் வரவில்லை... ஜெயலலிதா - அஜித் வரவில்லை... காரணம் இதுதான்!

Published on 08/08/2018 | Edited on 08/08/2018

நேற்று (07 ஆகஸ்ட் 2018) மாலை திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் காலமானார். இன்று அதிகாலை அவரது உடல் ராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்கு நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரமுகர்கள் அனைவரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

ajith stalin



தமிழ் நடிகர்களுள், ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் இன்று வர இயலாததால், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா வந்து அஞ்சலி செலுத்தினர். சில நாட்களுக்கு முன்பு கலைஞர், காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போது நடிகர் விஜய் அங்கு சென்று ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார். இன்று அவர் அமெரிக்காவில் 'சர்க்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலையில் இருப்பதால் உடனடியாகக் கிளம்பி வர இயலவில்லை. அதனால் அவர் கலைஞருக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று கூறப்பட்டது. 
சர்க்கார் திரைப்படம், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
 

vijay stalin



இதே போல, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.ஜெயலலிதாவின் அன்புக்கு பாத்திரமான நடிகர் அஜித்தால் அங்கு வந்து அஞ்சலி செலுத்தமுடியவில்லை. அப்போது 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்ததால் நடிகர் அஜித் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை. அதற்கு மறுநாள் அதிகாலையில் சென்னை வந்த அஜித் விமான நிலையத்திலிருந்து நேரே மெரினா சென்று அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.                      
    

 

 

 

சார்ந்த செய்திகள்