Skip to main content

ஆஸ்கர் குழுவின் அழைப்பை ஏற்ற சூர்யா; திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் பாராட்டு 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

actor surya accepted academy invitation

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 

 

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, ஜோதிமணி, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மற்றும் பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில்  இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கர் விழா; இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த திரைப் பிரபலங்கள் வலியுறுத்தல்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Oscars 2024 Celebrities call for Israel-Hamas ceasefire

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

இதனிடையே ஆஸ்கர் 2024 சிவப்பு கம்பள வரவேற்பில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தங்களது ஆதரவை  தெரிவித்துள்ளனர். அதனை வலியுறுத்தும் விதமாக ஆர்டிஸ்ட்ஸ் 4 சீஸ் ஃபையர் (Artists4Ceasefire) அமைப்பினுடைய ஒரு சின்னத்தை தங்களது ஆடையில் அணிந்திருந்தார்கள். ஒரு கைக்குள் ஒரு இதயம் இருப்பது போல அந்த சின்னத்தில் வரையப்பட்டிருந்தது. இதேபோல் கடந்த மாதம் நடந்த கிராமி விருது விழாவிலும் இந்த பேட்சை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Next Story

ஆஸ்கர் 2024 - ஆடையில்லாமல் வந்து அதிர்ச்சியைக் கொடுத்த ஜான் சீனா

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
oscar 2024 john cena comes stage on without dress

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருட ஆஸ்கர் விழாவில், நீலகிரி முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம், சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வென்றது. ராஜமௌலில் இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் சிறந்த பாடல் என்ற பிரிவில் விருது வாங்கியது.  
 
இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் இந்தாண்டு இந்தியாவிலிருந்து மலையாள படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதி போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டது ஆகும். இப்படமும் விருது பெறவில்லை.  

இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், ஒவ்வொரு விருதாக அறிவித்து வந்தார். அந்த வகையில் சிறந்த ஆடை வடிவமைப்பு விருது வழங்குவதற்கு முன் பேசிய அவர், ஆஸ்கர் வரலாற்றில் எந்த தருணம் பைத்தியக்காரத்தனமாக இருக்க முடியும். 46வது ஆஸ்கர் விருது விழா நடக்கும் போது, டேவிட் நெவின் எலிசபெத் டெய்லரை அறிமுகம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் ஆடையில்லாமல் மேடையில் ஓடினார். அதே போல் இன்றைய நிகழ்வில் ஆடையில்லாமல் ஒருவர் மேடையில் ஓடி சென்றால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார். உடனே அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது. 

பின்பு மேடையின் பின்புறம் ஓரத்திலிருந்து பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சீனா, எட்டிப் பார்க்க அவர், தொகுப்பாளரை அழைத்து மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் எண்ணம் இப்போது எனக்கு தோன்றவில்லை. அது சரியாக இருக்கும் என நினைக்கவில்லை. இது ஒரு அருமையான நிகழ்ச்சி. இதில் போய் ஆடையில்லாமல் மேடையில் ஓடச் சொல்லும் ஐடியாவுக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று ஜாலியாக பேசினார். பின்பு ஆடையில்லாமல் மெல்ல மெல்ல மேடையின் நடுப்பகுதிக்கு வந்து அனைவரின் முன்பும் தோன்றினார். பின்பு மைக்கில் பேசிய அவர், ஆடை ரொம்ப முக்கியமானது என கூறினார். இதையடுத்து தொகுப்பாளர் வந்து, விருதுக்கான நாமினேஷன் பட்டியலை அறிவித்தார். அதன் பிறகு மேடையில் உள்ள விளக்குகளை அனைத்து, ஜான் சீனாவிற்கு சிலர் உடை எடுத்துவந்து அணிவித்துவிட்டு சென்றனர். இந்த செயல் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.