Skip to main content

மருத்துவமனையில் தனுஷ் பட நடிகர்; உதவி கேட்டு உருக்கம்

Published on 06/03/2025 | Edited on 06/03/2025
actor Abhinay in hospital

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அபினய். பின்பு மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ச்சியாகத் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடைசியாக சந்தானம் நாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு இவர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இதனிடையே நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். 

இந்த நிலையில் இவர் லிவர் சிரோசிஸ்(Liver Cirrhosis) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருப்பது பலரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது.  

இந்த சூழலில் அவர் நிதியுதவி கேட்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை ரூ.15 லட்சத்துக்கு மேல் சிகிச்சைக்காகச் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 லட்சம் தேவைப்படுவதால், அதற்கு உதவுமாறு உருக்கமாகக் கேட்டுள்ளார்

சார்ந்த செய்திகள்