Skip to main content

‘காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே...’ - திருமணமான மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

Published on 16/12/2024 | Edited on 16/12/2024

 

கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் மணமக்களின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய திரையுலக நண்பர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்து முறைப்படி அன்று கல்யாணம் நடந்த நிலையில் அடுத்து கிறுத்துவ முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்