முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், டைவர்ஸுக்கு அப்ளை செய்த பின் கணவரை பற்றி விசாரிக்கும்படி பெண் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
டைவர்ஸுக்கு அப்ளை செய்த பின்னர், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து தருமாறு ஒரு பெண் என்னிடம் வந்தார். அவரிடம் விசாரிக்கையில், தமக்குள் ஒத்துவராததால் இருவரும் பிரிந்து விடலாம் என்று கணவர் முடிவு செய்து டைவர்ஸுக்கு அப்ளை செய்த இருவரும் மீயூட்ச்சுவல் கன்செண்டுக்கு அப்ளை செய்திருக்கின்றனர். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் தான் தன்னை விட்டு விலகுகிறார் என்று மனைவி நினைக்கிறார். ஆனால், இருவரும் தனித்தனியாக வாழ்ந்தாலும் பெண் குழந்தையை சேர்த்து வளர்க்க வேண்டும் என்று கணவர் சொல்கிறார் எனச் சொன்னார்.
நாங்கள் வழக்கம்போல், அந்த கேஸை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணின் கணவரை ஃபாலோவ் செய்கிறோம். அப்படி ஃபாலோவ் செய்த போது, அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். மேலும், கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு குடும்பம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்தோம். இதுபற்றி அந்த பெண்ணிடம் விபரத்தை சொன்னோம். அதற்கு அந்த பெண், இருவரும் பிரிந்து தனித்தனியாக வேறு ஒரு திருமணம் செய்யாமலே பெண் குழந்தையை சேர்த்து வளர்ப்பதில் தனக்கு எந்தவொரு ஆட்சேயபணம் இல்லை. ஆனால், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதால் டைவர்ஸ் கொடுப்பதற்கு தான் யோசிக்க வேண்டும் என்கிறார். ஏனென்றால், அந்த பெண்ணுடன் இருந்தால் அங்கு தான் அவருக்கு உடன்பாடு இருக்கும். இதனால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதில் தனக்கு விருப்பமில்லை என்கிறார்.
ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால், குழந்தை அம்மா வீட்டில் 5 நாட்களும், அப்பா வீட்டில் 2 நாட்களும் வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு கணவர் வருகிறார். இந்த பெண் என்னிடம், குழந்தையின் மனநிலை பாதிக்கப்படும் என்பதால், கணவர் தொடர்பில் இருக்கும் பெண், கணவரோடு இருக்க மாட்டார் தானே? எனக் கேட்டார். அந்த பெண் என்ன முடிவில் இருக்கிறார் என்பதை இப்போதே என்னால் கூற முடியாது. அதனால் அந்த விஷயத்தை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் டைவர்ஸ் கொடுக்காமல் இருவரும் தனியாக இருந்து குழந்தையை சேர்த்து வளர்ப்போம் என்றே சொல்லிவிடுங்கள் என்று சொன்னேன்.