Skip to main content

தமிழ்நாடு பிரிமீயர் லீக் - தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
தமிழ்நாடு பிரிமீயர் லீக் - தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் லீக் ஆட்டங்களில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிரடியாக ஆடிய தூத்துக்குடி அணி, ஆட்டத்தின் 13-வது ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.

சார்ந்த செய்திகள்