Skip to main content

ஒரு விக்கெட் தூரத்தில் வெற்றி! - நெருங்கும் இந்தியா!!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கிறது.
 

Virat

 

 

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் சவால் நிறைந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே, எட்க்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதோடு, 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது. இதையடுத்து நாட்டிங்காமில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதிலிருந்து அதிரடி கிளப்பிய இந்திய அணி, வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங்கைக் காட்டி மிரட்டியது. 
 

 

 

521 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்தை திருப்பிவிட்ட இந்திய அணி, பவுலிங்கில் மீண்டும் அசத்தியது. இருப்பினும், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணை நிதானமாக ஆடி களத்தில் ஈடுகொடுத்தது. நான்காம் நாள் ஆட்டம் இறுதிகட்டத்தை நெருங்கிவந்த நிலையில், பும்ராவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. இறுதியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினால் வெற்றி இலக்குடன் இருந்தநிலையில், அடில் ரஷீத் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் களத்தில் உள்ளனர். அஸ்வின் வீசிய ஓவரில் அடில் ரஷீத் லெக்பேடில் பந்து பட்டது. ஆனால், அம்பயர் மறுத்து, ரிவியூ வரை சென்றும் அம்பயரின் முடிவு இறுதியாக்கப்பட்டது. இதையடுத்து, நான்காவது நாளே வசப்பட்டிருக்க வேண்டிய வெற்றி, ஐந்தாவது நாளுக்கு கூட்டிவந்திருக்கிறது.