Skip to main content

பாகிஸ்தானில் விளையாட மறுத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

இந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 தொடரில் மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தொடரை பாகிஸ்தானில் வைத்துக்கொள்ளலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. 
 

new

 

 

 

பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடப்பதில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நினைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து அணியை தங்கள் நாட்டிற்கு விளையாட அழைத்தது. இந்த அழைப்பு குறித்து பரிசீலிப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 
 

இந்நிலையில், பாகிஸ்தான் செல்லும் எண்ணம் இல்லை என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு, ஐசிசி, பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2003-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகில், சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால், உடனடியாக தொடரை ரத்துசெய்துவிட்டு நியூசிலாந்து அணி சொந்த நாடு திரும்பியது. அதன்பிறகு, 2009-ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் வந்த பேருந்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, எந்த அணியும் பாகிஸ்தான் செல்வதில்லை.