Published on 25/10/2020 | Edited on 25/10/2020

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (25/10/2020) இரு போட்டிகள் நடக்கின்றன.
துபாயில் இன்று (25/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதேபோல், அபிதாபியில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.