Skip to main content

ரொனால்டோ இல்லாத ரியல் மேட்ரிட்ஸ் சாத்தியமா? - பயிற்சியாளர் கருத்து

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

ரொனால்டோ இல்லாத ரியல் மேட்ரிட்ஸ் அணியைக் கட்டமைப்பது உற்சாகம் நிறைந்த சவாலாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபிடொக்யூ தெரிவித்துள்ளார். 
 

jul

 

 

 

ரியல் மேட்ரிட்ஸ் அணியில் ஒன்பது ஆண்டுகளாக விளையாடி வந்தவர் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அந்த அணியின் மொத்த அடையாளமாகவே இருந்துவந்த அவர், சமீபத்தில் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு இத்தாலி நாட்டின் ஜுவெண்டஸ் அணிக்காக விளையாடச் சென்றுவிட்டார். இது ரியல் மேட்ரிட்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 
 

இந்நிலையில், ரொனால்டோவால் ஏற்பட்ட வெற்றிடம் குறித்துப் பேசிய ரியல் மேட்ரிட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபிடொக்யூ, “நான் அணியில் பயிற்சியாளராக ஒப்பந்தமாகும்போது, ரொனால்டோ ரியல் மேட்ரிட்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கூடிய விரைவில் வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார். ஒரு பயிற்சியாளராக அவர் இல்லாத வலிமையான அணியை கட்டமைப்பதை மிகப்பெரிய மற்றும் உற்சாகம் நிறைந்த சவாலாகவே பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

 

 

மேலும், கரேத் பேல் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் ரியல் மேட்ரிட்ஸ் அணியை வலுவானதாக அமைப்பதற்கு உதவுவார் என்று நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.