ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றிற்கு 4 அணிகள் தயாரான நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடங்களை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நேற்று இறுதி போட்டியில் விளையாடியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாற பனுகா ராஜபக்ஷே, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் எடுத்தார்.
171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இலங்கையின் சிறப்பான பந்துவீச்சில் தொடர்ச்சியாய் விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 55 ரன்களும் இப்திகார் அகமது 32 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தான் சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் எடுத்தனர். 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 6 வது முறையாக கோப்பையை வென்றது.
பனுகா ராஜபக்ஷே ஆட்டநாயகன் விருதையும் ஹஸரங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.