பல் கூச்சம் குறித்த பல்வேறு தகவல்களை பல் சிறப்பு மருத்துவர் அருண் கனிஷ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பல் கூச்சம் என்பது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனைதான். சரியான முறையில் நாம் பல் துலக்காமல் இருப்பது பல் கூச்சத்திற்கான காரணங்களில் ஒன்று. அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவது, ஒரே இடத்தில் அதிக அழுத்தம் கொடுப்பது, சில பற்பொடிகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் காரணமாக பல் கூச்சம் ஏற்படுகிறது. அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது பல் கூச்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷ் தான் பிரச்சனைக்கு காரணம் என்றால், அதை உடனடியாக மாற்ற வேண்டும். பற்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால், சிகிச்சை எடுக்க வேண்டும். பற்களை சுற்றியிருக்கும் அழுக்குகளை நீக்கினாலே இந்தப் பிரச்சனை சரியாகும். இதற்கான பிரத்தியேகமான டூத் பேஸ்டுகளையும் நாம் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இவற்றால் பல் கூச்சம் குணமாகவில்லை என்றால், சிமெண்ட் சிகிச்சைக்கு நாம் செல்லலாம். லேசர் சிகிச்சை மூலமாகவும் இதை நாம் குணப்படுத்த முடியும். இறுதி முயற்சியாக ரூட் கேனல் சிகிச்சை செய்துகொள்ளலாம். இது நிச்சயமாக பல் கூச்சத்தை குணப்படுத்தக் கூடியது. பல் கூச்சம் இருப்பவர்கள் குளிர்ச்சியான உணவுகள், சூடான உணவுகள், இனிப்பு உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.