சேலம் அம்மாப்பேட்டையில் வசிக்கும் ஆறுமுகம் மற்றும் கெளரி தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இதில் மகளே மூத்தமகள் ஆவர். இவரின் பெயர் வனிதா ஆறுமுகம். தந்தை விசைத்தறி கூலி தொழில் செய்து வந்தார் . அவருக்கு உதவியாக இவரின் மனைவியும் அதே வேலையை கவனித்தார் . இந்நிலையில் எதிர்பாராத விதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் மூத்த மகளாக உள்ள வனிதா அவர்கள் தான் பத்தாம் வகுப்பின் படிப்பிற்கு பிறகு "Diploma in Fashion Designing" தனியார் கல்லூரியில் சேரந்து முடித்து விட்டு சுய தொழிலான "தையற் தொழில்" செய்து வந்தார். எனவே வீட்டில் இருந்த ஒரே ஒரு தையல் மெஷின் வீட்டிலிருந்த வாறே தையற் தொழிலை செய்ய தொடங்கினார். இந்நிலையில் தனது தம்பிகளான கனகராஜ் மற்றும் விஜய சாரதியும் தந்தை தொழிலை மேற்கொள்ள அதிலும் நஷ்டம் ஏற்பட குடும்ப பாரத்தை முழுவதும் வனிதா மேல் விழுந்தது.
இந்நிலையில் வனிதா அவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வந்தார். தனது 22 ஆம் வயதில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் கணவரின் ஆதரவுடன் தொடர்ந்து விடா முயற்சியில் ஈடுபட்டார். தையல் தொழிலுடன் "தையல் வகுப்பு" நடத்தி வந்தார். இத்துடன் பியூட்டிசன் வகுப்பு செல்ல ஆசைப்பட்ட அவர் சேலம் , கோவை , சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். மேலும் வனிதா அவர்கள் நம்மிடம் கூறும் போது 2006 ஆம் ஆண்டு சேலம் நான்கு ரோடு பகுதியில் Naturals , Green trends இணையான வகையில் "Tulips Medspa" என்னும் பெயரில் புதிய அழகு நிலையம் தொடங்கினேன். பின் குஜராத் ,டெல்லி , கர்நாடகா பல மாநிலங்களுக்கு சென்று வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். பத்தாம் வகுப்பு வரை பயின்ற எனக்கு ஆங்கிலம் தொடக்கத்தில் கடினமாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்தேன். பிறகு பல மாநில அழகு கலை நிபுணர்கள் நட்பு கிடைத்தது. இதன் பயனாக சேலத்தில் நடந்த நடிகர்கள் நடிகைகளுக்கான கலை நிகழ்ச்சியில் மேக் ஆப் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இதில் முன்ணணி நடிகைகளுக்கு மேக் அப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சேலத்தில் சிறந்த பியூட்டி பார்லருக்கான "Artic" Awards - 2018 ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "V to V Wedding Planner & Event Management " நிறுவனத்தை தொடங்கி இன்று வரை சிறப்பாக நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் கல்யாண வீட்டில் வாழை மரம் முதல்
உணவு தயாரித்தல் , ஆடைகள் , பூக்கள் , ஹால் டெக்கரேசன் , மேளதாளம் , வீடியோ உட்பட கல்யாண இறுதி வரை இருந்து சிறப்பிக்கும் வகையில் A to Z என பெயரிட்டோம். இது சேலம் மாநகரில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சகோதரி வனிதா அவர்கள் கூறுகையில் கடின உழைப்பு , விடா முயற்சியும் இருந்தால் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொண்டு பெண்ணால் சாதிக்க முடியும் என கூறினார். இதனை தொடர்ந்து சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் , வேலை வாயப்புகளை ஏற்படுத்தி தரவும் தயாராக இருக்கிறேன் என நம்மிடம் கூறினார். உலகெங்கும் வாழும் மகளிர்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி விடைப்பெற்றார். எனவே நாம் அனைவரும் பெண்களை மதிப்போம் ! பெண்களுக்கு ஊக்கம் அளிப்போம்! உலகத்தை அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்ற பாதையில் அழைத்த செல்ல உறுதியேற்போம்!
பி . சந்தோஷ் , சேலம்