வாழ்வில் பிரச்சினைகள் இருக்க லாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகிவிடக்கூடாது. துரோகியைவிட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களைக்கூட தள்ளிவைத்துப் பார்க்கலாம். ஆனால் துரோகியையும் எதிரியையும் நம் பார்வையிலேயே வைத் திருப்பதுதான் நல்லது. அப்பொ ழுதுதான் நம்மைச்சுற்றி என்ன நடக் கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ் விலும் ஏதாவது ஒருவகையில் ஓர் எதிரி இருக்கத்தான் செய்கிறார். சினிமா வில் ஹீரோ மட்டும் இருந்தால் அவர் எதனால் ஹீரோ என்று புரியாது. உடன் ஒரு வில்லன் இருந்தால்தான் அந்த ஹீரோவின் பலம் மக்களுக்குப் புரியும்.
நம்மைச்சுற்றி எல்லாருமே நல்ல வர்களாக இருந்துவிட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்த மில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம். அப்பொ ழுதுதான் போட்டிகள் வளரும். எந்த விதத்தில் திட்டமிட்டால் சரியான பாதையில் செல்லலாம் என்று யோசித்து வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணரமுடியும். "நன்மையும் தீமையும் பிறர் தர வாரா' என்பார்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் வலிலிமையும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளிலிலிருந்து உருவாவதே.
ஆனால் சிலர் பிரச்சினை என்று வந்துவிட்டால், அதிலிலிருந்து மீள்வதற்கு என்ன வழியென்று ஆராயாமல் பிரச் சினை செய்தவர்களைப் பழிதீர்க்க முயல் வார்கள். அல்லது இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதைப்போல சோகத்தில் மூழ்கிவிடுவார்கள்.இப்படி சோதனைகளை சந்திப்ப வர்கள் தங்களுடைய ஜனன ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, ஏன் எதிரிகள் பாடாய்ப்படுத்துகிறார்கள்? இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற் போல், மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி பலம்பெற்று லக்னாதிபதி பலமிழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6-ஆம் இடம்தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்பு பற்றியும், அது யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6-ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம்பெற்றிருந்தாலும், 6-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6-ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6-ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகியோடும்.
அதுவே 6-ஆம் அதிபதி பலமிழந் திருந்து, 6-ஆம் வீட்டை சனி, செவ் வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னா திபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், 6-ஆம் வீட்டில் அமைந் திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத்தேவையில்லை. அவர் செய்யும் செயல் களால் அவருக்கு அவரே எதிரியாக இருந்து முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்திக் கொள்வார். ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும், 6-ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்க லால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளால் வீண்விரோதங்கள் ஏற்படும்.
3-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதி யுடன் இணைந்தோ 6-ஆம் வீட்டிலோ அமையப்பெற்றால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுடன் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலமிழந்த செவ்வாய் 3, 6-க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றாலும், செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்தில் ராகு, சனி அமைந்து, செவ்வாய் பாவகிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பைப் பெறுவார். உடன்பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும். சுக்கிரன் வீடான ரிஷபம், துலாத்தில் ராகு, சனி அமைந்து சுக்கிரன் பாவகிரக நட்சத் திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் பெண் உடன்பிறப்புகளின் எதிர்ப்பைப் பெறுவார். உடன்பிறந்தவர்களே இல்லை என்றாலும் பெண் உறவினர்கள் பகை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
4-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6-ஆம் வீட்டிலோ அமையப்பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், சந்திரன் வீடான கடகத்தில் ராகு, சனி அமைந்து, சந்திரன் பாவ கிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும் தாய் மற்றும் தாய்வழி உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும். ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் வீட்டில் அமைந்தாலும், 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும், குரு வீடான தனுசு, மீனத்தில் ராகு, சனி அமைந்து, குரு பாவகிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள். களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டை கூட்டுத்தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7-ஆம் அதிபதி 6-ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6-ஆம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைப்பிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந் தால் மணவாழ்க்கையே நரகமாகிவிடும் அளவுக்கு மனைவி, மனைவிவழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத்தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறு வார்கள்.
தந்தை ஸ்தானமான 9-ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 6-ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தைவழி உறவிகளிடமும் சுமுக மான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6, 9-க்கு அதிபதிகளுடன் தந்தை காரகன் சூரியன் இணைந்திருந்தாலும், சூரியன் வீடான சிம்மத்தில் ராகு, சனி அமைந்து சூரியன் பாவ கிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும் கண்டிப் பாக தந்தை, தந்தைவழி உறவினர்கள் ஜாத கருக்கு விரோதியாக மாறுவர். தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6-ல் இருந்தாலும், 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண்பழிச்சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்குச் செல் கிறோம் என்ற அளவுக்கு வெறுப்பு உண்டாகும்.
அதுபோல 11-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், 6-ஆம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன்பிறப்பு களுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலமிழந்து அந்த வீட்டின் அதிபதி 6-ஆம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6-ஆம் வீட்டில் அமையப்பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர் களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சினைகள் உண்டாகும்.