இன்றைய பஞ்சாங்கம்
06-10-2020, புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 05.54 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
தினசரி ராசிபலன்- 06.10.2020
ரிஷபம்
இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்கள் கூட எளிதில் முடிந்து விடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை பெறலாம்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.