Skip to main content

கடல் என்னும் தெய்வம்!

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

ராமசுப்பு

சமுத்திரம் எனப்படும் கடலானது, பூமியை முழுவதுமாகச் சுற்றி எல்லையற்று பரந்து விரிந்துள்ளது. இதன் ஆழத்தைக் கண்டவர்கள் கிடையாது. இதன் எல்லை இவ்வளவு தான் என்று சொன்னவர்களும் இல்லை. இந்தக் கடல் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிறத் தில் காணப்படுகிறது. பசிபிக்கடல் பச்சையாக உள்ளது. வங்காள விரிகுடா நீலநிறத்தில் உள்ளது. அரபிக்கடலோ கருநீலநிறமாக உள்ளது. இந்துமகா சமுத்திரம் மணல் நிறமாகக் காட்சியளிக்கிறது. இது போல கருங்கடல், செங்கடல் என்று பல நிறத்திலும் காணப்படுகிறது.

கடலுக்குள் வாழ்கின்ற உயிரினங் கள் கணக்கற்றவை. சுறாமீன், திமிங்கலம், டால்பின் போன்ற பெரியமீன்களும், தங்கமீன், சிறுமீன் உள்ளிட்ட பல சிறிய வகை மீன்களும் வாழ்கின்றன. கடல்குதிரை, கடல் ஆமை போன்றவையும் உள்ளன. இவைதவிர நமக்குத் தெரியாத எத்தனையோ உயிரினங் களும் கடலுக்குள் வாழ்கின்றன. ஆபரண இனமான முத்தும், பவளமும் கடலிலிலிருந்து தான் கிடைக்கப்பெறுகின்றன. கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளும், மேலும் பல நதிகளும் கடலிலில்வந்து கலக்கின் றன. இந்த நதிகளெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருந்தாலும், இவை கடலில் கலந்துவிட்டால் உப்பு நீராகிவிடுகிறது.

 

god



எத்தனையாயிரம் நதிகள்வந்து கடலில் கலந்தாலும், அவற்றை உள் வாங்கிக் கொள்கிறது. கடல் நிரம்பி வழிந்து வெளியே வருவது கிடையாது. உப்பான கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள் மழையாகப் பொழி கின்றன. ஆனால் அந்த மழை நீர் உப்பாக இருப்பதில்லை. இதெல்லாம் இறைவன் நிகழ்த்தும் இயற்கை அதிசயங்கள். இந்தக் கடல் அதிகமான எடையுள்ள கப்பலையும் தாங்குகிறது. சில சமயத்தில் அதைக்கூட விழுங்கிவிடுகிறது. ஒரு காலத்தில் ஒரு நாட்டிலிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போவதற்கு கடல்வழிப்பயணம் என்று கப்பலிலில்தான் போய்வந்து கொண்டிருந்தனர். இப்பொழுதும் போய்வருகின்றனர். பாய் மரக்கப்பல்களில் சென்று வாணிபம் நடத்திய காலங்களு முண்டு.

இப்பொழுதெல்லாம் கடலுக்குள் அவ்வப்போது "பூகம்பம்' என்ற நிலநடுக்கம் ஏற்படுகின்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது. அப்போது கடலலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து "ஆழிப்பேரலை' என்ற "சுனாமி' ஏற்படுகிறது. கடற்கரையில் ஆங்காங்கே தெய்வத்திற்கான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தக் கடற்கரை ஆலயங்கள் எல்லாம் ஒவ்வொரு வகை யிலே சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன. ஒருவர் காலமாகி இறைவனடி சேர்ந்துவிட்டால், அவரை தீயிலிலிட்டுச் சாம்பலாக்கி, அந்த சாம்பலை கடலில் கரைத்து இறந்த ஆத்மா வுக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொடுப்பது இந்து மதத்தில் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடலில் அஸ்தி யைக் கரைத்தால், கடலில் கலந் துள்ள பல புண்ணிய நதிகள் அந்த அஸ்தியை ஏற்று அதை மகா விஷ்ணுவிடம் ஒப்படைக்க, அதைப் பெற்றுக் கொள்ளம் பகவான் இறந்த வர்களுக்கு நல்ல கதியைக் கொடுப்ப தாக ஐதீகம்.

 

god sea



இதேபோல அமாவாசை, மகாளயபட்சத்தில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு விடப்படும் தர்ப்பணம் மிகவும் விசேஷமானது. இந்த தர்ப்பணத்தை சமுத்திர ராஜன் பெற்று மூதாதையர் களுக்குப் பகிர்ந்தளிப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. கடலிலில் விடும் தர்ப்பணம் என்பது மிகமிக உயர்வானது. பக்தர் ஒருவர் கனவில் கடவுள் தோன்றி, தன் உருவச் சிலை கடலுக்குள் கிடப்பதாகவும், மீட்டெடுத்து வழிபடுமாறும்கூறி மறைந்தார். அப்படிக் கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட கடவுளே திருச்செந்தூர் முருகனாகும். மாசிமகத்தன்று கடவுளின் தரிசனம் கடற்கரை யில்தான் நடக்கிறது. அதேபோல சூரசம்ஹாரம் என்ற நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் இன்றும் கோலாகலமாக நடக்கிறது.

இராமேஸ்வரம் கடற்கரைக் கோவிலிலில் பக்தர்கள் தர்ப்பணம், சிரார்த்தம், நாகதோஷப் பரிகாரம் போன்றவற்றைச் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்கின்றனர். கங்கையில் குளித்து கடைசியில் இராமேஸ்வரம் கடலிலில் மூழ்கி எழுவதால் பாவங்கள் தொலைக்கப்படுவதாக ஐதீகம். சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனை வதம்செய்ய, இராமேஸ்வரம் கடலிலில் ஸ்ரீராமபிரான் பாலம் அமைத்து இலங்கை சென்றதாக இராமாயண காவியம் கூறுகிறது. இன்று இராமேஸ்வரம் செல்ல இந்தப் பாலமே அஸ்திவாரமாக இருக்கிறது. இந்தக் கடலையே தாண்டிச் சென்று சீதையைச் சந்தித்திருக்கிறார் வீர அனுமன்.

இதுபோல இன்னும் பலவகையிலும் இறைவனுடன் தொடர்பு பெற்று, தெய்வீக அம்சம் பொருந்தியதான இந்த சமுத்திரம், இன்றைய காலகட்டத்தில் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதைக் காணும்போது மனம் நிறையவே வேதனைப்படுகிறது. கடல் இறைவனுக்குச் சமமானது. கடலைக் கடவுளாகப் பூஜித்து வழிபடவேண்டும். காரணம் பாற்கடலிலில்தான் பரந்தாமன் குடி கொண்டிருக்கிறான். அங்கே மகாலட்சுமியும் உடனிருக்கிறாள். இந்தக் கடலை சமுத்திர ராஜன் என்னும் அரசன்தான் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே கடவுள் குடி கொண்டிருக்கும் கடலை தெய்வீகமாக- பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயமாகக் கருதி வழிபடவேண்டும்.

ஆனால் பலரும் கடவுளாகக் கருதுவ தில்லை. மாறாக அந்தக் கடலிலில் கள்ளத் தோணிகள் மூலம் கடத்தல் பொருள்களைக் கொண்டு வருகின்றனர். திருட்டுத்தனமாக இரவோடு இரவாக சில தீவிரவாதிகள், சமூக விரோதிகள் இந்தக் கடலிலில் படகுகள் மூலம் வந்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின் றனர். அப்பாவிகளை சுட்டுப் பொசுக்கு கின்றனர். கடலை இதற்காகப் பயன்படுத்து வது பெரிய தெய்வீகக் குற்றம் என்பதை அவர் கள் அறிந்துகொள்வதில்லை. சில கடற் கொள்ளையர்கள் கடலிலிலே முகாமிட்டு வட்டமிட்டுக் கொள்ளையடிக்கின்றனர்.

இரவு நேரத்தில் கடற்கரையில் தவறான செயல்கள் நடக்கின்றன. பகலிலிலும் கண் கூசும்படி இளைய வயதினர் நடந்துகொள் கின்றனர். இறைவனின் கண்ணெதிரே இவ்வாறு நடந்துகொள்வது தவறென்று அவர் கள் உணர்வதில்லை. ஊரிலுள்ள குப்பைக்கூளங்கள், சாக்கடை நீர் என்று அழுக்குகளையெல்லாம் தூய்மை யான கடல் நீரில் கொண்டுவந்து சேர்க்கின்றனர். இதே அழுக்கு நீரில்தான் விநாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை போன்ற நாட்களில் விநாயகரையும், துர்க்கையையும் கொண்டு வந்து கரைக்கின்றனர். இது பெரும்பாவம். இது தெய்வத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.

வளங்கள் பலவற்றையும் வாரிவழங்கி நம்மை வாழவைக்கிறது கடல்தெய்வம். நம் பாவங்கள் எல்லை மீறும்போது கடலும் சற்று எல்லை மீறுகிறது. அது ஏற்படுத்தும் பேரழிவோ நம்மால் தாங்கிக்கொள்ள இயலாததாக உள்ளது. எனவே இயற்கையை இறைவனாய்ப் போற்றுவோம். கடலை வணங்கி அதன் தூய்மையைக் காப்போம்.