முனைவர் முருகு பலமுருகன்
உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் இருக்கின்றன. இதில் பெருவாரியான மக்களை பயமுறுத்திவருவது சர்க்கரை நோய். நாம் உண்ணும் உணவு சரிவர செரிக் காததாலும், ஜீரணசக்தி நன்றாக இல்லாத காரணத்தாலும், உடலுக்கு மிகவும் தேவையான இன்சுலின் சரிவர சுரக்காத காரணத்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. ஜோதிடக்கலை என்பது எல்லாருக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகிறது. நமது ஜாதகத்தில் கிரகநிலை சரியாக இல்லை யென்றால் நோய்கள் உண்டாகின்றன. சர்க்கரை வியாதியைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கின்றபோது சுக்கிரன் சர்க்கரை வியாதிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்.நாம் உண்ணும் உணவு சரியாக செரிப் பதற்கு நமது ஜனன ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், 6-ஆம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது வாழ்க்கை முறையில் இன்று பலருக்கு சர்க்கரை வியாதி சர்வ சாதாரணமாக வந்துவிட்டது.
குழந்தைப் பருவத்தில் உள்ளவர் களுக்குக்கூட இன்று சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்திருந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும், பாவிகள் சேர்க்கைப்பெற்று, அக்கிரகங்களின் தசாபுக்திக் காலத்திலும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதுபோல சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலமிழந்திருந்தால் சர்க்கரை வியாதி ஏற்படு வதற்கான வாய்ப்பு உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்றாலும், 4-ஆம் வீட்டைப் பாவிகள் பார்வை செய்தாலும், 4-ஆம் வீட்ட திபதி பாவிகள் சேர்க்கைப்பெற்று, உடன் சுக்கிரன் இருந்தாலும் சர்க்கரை வியாதி எளிதில் ஏற்படுகிறது.
அதுபோல காலபுருஷ தத்துவப்படி 4, 6-ஆம் வீடான கடகம், கன்னியில் பாவ கிரகங்கள் பலமிழந்து அமையப்பெற்றிருந்தால், ஜீரணசக்தி பாதிக்கப்பட்டு அதன்மூலம் சர்க்கரை வியாதி உண்டாகும். ஜல ராசிகள் என வர்ணிக்கப்படக்கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் இரண்டுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் சர்க்கரை வியாதி எளிதில் உண்டா கிறது. சந்திரன், சுக்கிரன் பாவிகள் சேர்க்கைப்பெற்று, 4, 9-ஆம் பாவங் கள் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியைக் கட்டுப் படுத்துவதற்கு ஜோதிடரீதியான வழிகளைப் பார்க்கின்றபோது, சாதகமற்ற கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்றபொழுது எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 4, 6-ஆம் பாவங்களில் அமையும் பாவ கிரகங்களின் தசாபுக்தி நடை பெறுகின்றபோதும், சுக்கிரன் தசா புக்தி நடைபெறுகின்றபொழுதும் சர்க்கரை வியாதிக்கான பாதிப்பு அதிகரிக்கிறது.
நாம் கட்டுப்பாட்டுடன் இருந் தால் சர்க்கரை நோய் பாதிக்காது. கட்டுப்பாட்டை மீறுகின்றபோது தான் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. நமக்கு கெடுதியான தசாபுக்தி நடை பெறுகின்றபொழுது, நாம் கட்டுப் பாட்டுடன் இருக்கமுடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற் குரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் கெடுதிகள் விலகும். சுக்கி ரனால் சர்க்கரை வியாதி அதிகம் ஏற்படுவதால், வெள்ளிக்கிழமை யன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதும், மகாலட்சுமிக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும் உத்தமம். அதுபோல பசுவுக்கு அகத்திக்கீரை அளிப் பதுகூட ஓரளவுக்கு கெடுதியைக் குறைக்கும். பராசக்தியை வழிபடுவது, துர்க்கா தேவியை வழிபடுவது, லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிப்பது, வேங்க டேசப்பெருமாளை தரிசனம் செய்வ தன்மூலம் கெடுதியிலிருந்து விலகி நாம் ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழலாம்.