மனம் ஒரு அற்புதமான விஷயம். அது ஏன் கெடுகிறது? ஒரு சிறு நிகழ்வினைப் பார்ப்போம். ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் என்னிடம் யோகப் பயிற்சி பெறுவதற்காக வந்தார். நான் அந்த இளைஞரிடம், ""நீங்கள் எதற்காக யோகப்பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள்?'' என்றேன்.
அதற்கு அவர், ""எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர் சொன்னார். இதற்கு மருந்து, மாத்திரைகள் முறையாக எடுத்துக் கொள்ளவேண்டும். சரியாக கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார். அதைக்கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். ஏனென்றால் எனக்கு 30 வயதுதான் ஆகிறது. அதன்பிறகு மருத்துவர் எனக்கு ஐஇட-க்கான மாத்திரைகளைக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடச் சொன்னார். ஒரு மாதம் சென்றபின் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார்.
தினசரி மாத்திரை சாப்பிட்டா லும் நான் சரியாகத் தூங்குவதில்லை. எனது மனம் என் இதயத்தைப் பற்றியே சிந்தித்தது. மூன்றுமாதம் கழிந்தது. ரத்த அழுத்தம் ஒரு நிலையில் இல்லை. காரணம் என் மனம் எனது இதயத்தின் மீதே இருந்தது. வீட்டில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும் அதே சிந்தனையாக இருந்தது.
என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. மாத்திரை சாப்பிட ஆரம்பித்த பிறகு தலைவலி வந்துவிட்டது. உடலில் ஏதோ மாறுதல் ஏற்படுவதை உணர்ந்தேன். அதோடு ஐஇட-க்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் இதுவரை நிறுத்தியதாக யாரும் சொன்ன தில்லை. வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை என்று காலத்தை ஓட்டவேண்டுமா என எண்ணும்போது எனக்கு பயமும் கவலையும் அதிகரித்தது.
அதனால் நான் சரியாகத் தூங்குவதில்லை. மீண்டும் மருத்துவரை அணுகினேன். மருந்தின் அளவீட்டை அதிகரித்தார். பயமும் அதிகரித்தது. அந்த சமயத்தில் என் நண்பன், "நான் ஒரு யோகாமாஸ்டரை அறிமுகப்படுத்து கிறேன். நீ அவரிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக்கொள். இந்தப் பிரச்சினையிலிருந்து சீக்கிரம் குணமாகி விடலாம்' என்று ஆலோசனை கூறினான்'' என்று தான் யோகப் பயிற்சி பெறவந்த காரணத்தைக் கூறினார். நான் அந்தத் தம்பியிடம், ""கவலைப்படாதீர்கள். யோகப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் உடலில் எந்த நோயும் வராது. மாத்திரையை படிப்படியாக நிறுத்திவிடலாம்'' என்று கூறினேன். அவர் ஆரம்பத்தில் யோகப் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அதன்பிறகு நான் அவரை திருவிடைமருதூரில் அமைந்துள்ள மகாலிலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்று, அந்த தலத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் இருக்குமாறும், அதில் குறைந்தது 15 நிமிடம் கண்ணைமூடி அமைதியாக அமர்ந்திருக்குமாறும் சொன்னேன். அவரும் சம்மதித்துச் சென்றார்.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். ஒருவனது குணம் அவன் மனதைக் கெடுக்கும். அப்போது குணம் எப்படியிருக்க வேண்டும்? குணம் ஒழுக்கம் நிறைந்ததாகவும், "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்றவாறும் இருக்க வேண்டும். மீண்டும் ஒருநாள் அந்தத் தம்பி வந்து மகாலிலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்று வந்ததாகக் கூறினார். இந்தத் தம்பியின் உடல் நலமாக இருக்க வேண்டுமெனில் அவரின் மனம் முதலில் சரியாகவேண்டும். அரைகுறையாக யோகப் பயிற்சியில் ஈடுபட வந்தவர் இப்போது தன்னை முழு மனதோடு ஈடுபடுத்திச் செயல்படுகிறார்.
நாட்கள் செல்லச்செல்ல அவர் முகத்தில் ஒரு தெளிவைக் காணமுடிந்தது. இவ்வாறு அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட, மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்று வந்ததனால் ஏற்பட்ட அதிர்வுகளும்
ஈசனின் ஆசிர்வாதமும் தான் காரணமாகும். ஆறுமாத கால யோகப் பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் முற்றிலுமாக குணமடைந்துவிட்டார். மனம் நலமாக இருந்தால் மட்டுமே உடல் நலமாக- ஆனந்தமாக இருக்க முடியும். ஒரு வெளிக்காயத்தை மருந்தினால் சரிசெய்ய முடியும். ஆனால் மனதில் ஏற்படும் பாதிப்பை யோகப் பயிற்சிமூலமே சரிசெய்ய முடியும். அதற்கு திருவிடைமருதூரில் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்மையப்பன் மகாலிங்க சுவாமியின் அருளாசி வேண்டும்.
வாருங்கள்; சுவாமி தரிசனம் செய்வோம். "இப்பூவுலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் நம்மை தரிசனம் செய்கின்றன. இதைப்போன்று நாமும் ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று வழிபட வேண்டும்' என்ற எண்ணம் சிவபெருமானுக்கு எழுந்தது. அதன்விளைவாக தேவாதி தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் புடைசூழ எம்பெருமான் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் உறையும் சிவலிலிங்கத்தை வணங்கினார். சிவபெருமான் தன் அச்சாக உள்ள லிங்கத்தையே வழிபட்டதால் இத்தல இறைவன் மகாலிங்கேஸ்வலிரர் என்னும் பெயரைப் பெற்றார்.
திருவிடைமருதூர் மகாலிலிங்க சுவாமி திருக்கோவிலிலின் தல விருட்சம் மருத மரமாகும். இதனை தேவர்கள் மூன்றாகப் பிரித்தனர். தலைப்பகுதியாகக் கருதப்படும் தலைமருது இருப்பது ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிலிகார்ஜுன சுவாமி கோவிலாகும். இடைமருது எனப்படும் மையப்பகுதியானது திருவிடை எனும் திருவிடைமருதூர் மகாலிலிங்க சுவாமி திருக்கோவிலாகும். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலுள்ள திருப்புடைமருதூர் கடைமருது என்றழைக்கப்படுகிறது.
திருவிடைமருதூர் மகாலிலிங்க சுவாமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அனைத்து திருக்கோவில்களிலும் முக்கண்ணனின் முதல்வன் கணபதிக்கே முதலில் பூஜைகள் செய்யப்படும். ஆனால் இங்கே மகாலிலிங்க சுவாமிக்குப் பூஜைகள் முடித்த பின்னரே கணபதிக்கு நடைபெறும். உலகிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று பூஜிக்கும் பலன் மகாலிங்க சுவாமியை தரிசித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம். மகா சக்திவாய்ந்த ஐந்துவகைத் தீர்த்தங்கள் இங்கே உள்ளன. அவை காருண்ட மித்ர தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என்பனவாகும்.
மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது அகத்தியரின் அருள்வாக்காகும். அதைப் போன்று குள்ள மகாமுனியான அகத்தியர் சிவன்- பார்வதி திருமணக்கோலத்தைக் கண்டுகளித்து ஆனந்தமடைந்த தலங்களில் திருவிடைமருதூர் திருத்தலமும் குறிப்பிடத்தக்க தலமாகும்.
மேலும் இக்கோவிலுக்கு மற்றுமொரு தனிச்சிறப்பு உண்டு. முன்பொரு சமயம் சந்திரன், குரு பகவானான பிரகஸ்பதியின் மனைவிமீது ஆசைகொண்டு அவரை அபகரித்தான். இதைக்கண்டு வெகுண்ட குரு பகவான் சந்திரனை நோக்கி, "உனது அழகெல்லாம் உருக்குலைந்து நீ அழியக் கடவாய்' என்று சபித்தார்.
அப்போதும் கோபம் தணியாத குரு பகவான், "உன் புத்தியும் மனமும் உன்னை அழிக்கட்டும்' என்றும் சபித்தார். இந்த தோஷம் நீங்க சிவபெருமானை நோக்கி சந்திரன் தவமியற்றினான். அவன் தவத்திற்கு மனமிரங்கி சிவபெருமானும் சாப விமோசனம் அளித்தார். சந்திரன் தவமிருந்தபோது அவனது மனைவிகளான 27 நட்சத்திரங்களும் இறங்கி வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவபெருமான் 27 நட்சத்திரங்களுக்கும் அருள்பாலிலித்தார். இத்தலத்தில் தோன்றிய 27 லிலிங்கங்களில் 27 நட்சத்திரங்களும் ஐக்கியமாகின. 27 லிங்கங்களும் ஒரே சந்நிதியில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இங்குள்ள லிங்கத்திற்கு விளக்கேற்றி வழிபட வினைகள் தீரும். இன்னும் சொல்லிலிக்கொண்டே போகலாம் இத்திருத்தலத்தின் பெருமைகளை. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற'
என்கிறார். ஒருவன் தன் மனதளவில் குற்றமற்றவனாகவும், மனத்தூய்மை உள்ளவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு அதுவே சிறந்த அறச் செயலாகும். எனவே மனத் தடுமாற்றம், மனக் குழப்பம், மனபயம், மனத் தெளிவின்மை போன்ற அத்தனைப் பிரச்சினைகளையும் நீக்கி நிம்மதி யைத் தரக்கூடிய தலமாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி தலம் விளங்குகிறது. எப்படிப்பட்ட மனபாதிப்பையும், மனக்குறைகளையும் களைந்தெறியும் மகாலிலிங்க சுவாமியை தரிசனம் செய்வோம்; மகிழ்ச்சியடைவோம்.