Skip to main content

இலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் சுமார் 310 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையித் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் 8 பேர் உட்பட 35 வெளி நாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த வெளிநாட்டினரை பாதுகாப்பாக அழைத்து வர உலக நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

srilanka



இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்திய அரசு எச்சரிக்கையை அலட்சியமாக எண்ணிய இலங்கை அரசு மன்னிப்பு கோரியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர சோதனையில் இலங்கை ராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெடிக்குண்டுகள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 26 பேரை இலங்கை போலீஸார் கைது செய்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பி.சந்தோஷ், சேலம் .

சார்ந்த செய்திகள்