Published on 07/04/2022 | Edited on 07/04/2022

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால், இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1 கோடி செலுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி அன்று தனுசுகோடி, தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்ய 12 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், 12 மீனவர்களும் வரும் மே மாதம் 12- ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால், மீனவர் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி ரூபாய் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.