கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் இத்தாலிக்குப் பிறகு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டில் இதுவரை 80,000க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,800 பேர் இதனால் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கரோனா பாதிப்பு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிகிச்சை பெற்றுவந்த இளவரசி மரியா தெரசா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரசால் ஆயிரக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக இழந்துள்ள ஸ்பெயின் மக்களுக்கு தங்கள் நாட்டு இளவரசியின் இழப்பு மேலும் துயரத்தைக் கொடுத்துள்ளது.