பாம்பைக் கண்டால் பயப்படாதவர்கள் யாரும் இல்லை எனலாம். பெரும்பாலானவர்கள் பாம்பை பார்த்தால் நடுங்குவார்கள். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி கூட உள்ளது. எதிரியை எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருப்பவர்களே பாம்பைக் கண்டு பயப்படும்போது நம்மைப் போன்ற பொது ஜனங்கள் எம்மாத்திரம் என்ற அடிப்படையில் அந்த சொல்லாடல் பயன்படுத்த படுவதும் உண்டு. ஆனால், வெகு சிலர் பாம்பை அசால்டாக கையில் பிடித்து விளையாடும் அளவிற்குப் பாம்புகள் மீது பயம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் சில நேரங்களில் பாம்புகளைப் படித்து விளையாடுவதை நாம் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்போம். சிலர் பாம்புடன் விளையாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகியுள்ளனர். ஆனால் சமீபத்தில் Reptile Hunter என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில் சிறுவன் ஒருவன் பாம்புடன் சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சிறுவன் சீண்டலைப் பொறுத்துக்கொள்ளாத அந்த பாம்பு அவரது தலையைக் கவ்வி விடுகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ்நத வீடியோ பார்த்துப் பார்த்து வருகின்றனர்.
Published on 23/09/2019 | Edited on 23/09/2019