Skip to main content

இயேசு கிருஸ்துவை ஓவர்டேக் செய்த ஆலிவ் மரம்... எதில் தெரியுமா..?

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற நாடு மான்டினிக்ரோ. இந்த நாட்டில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244 ஆண்டுகள் எனத் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது இயேசுவின் வயதை விட இந்த மரத்தின் வயது அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த மரத்தை உள்ளூரை சேர்ந்தவர்கள் ஸ்டாரா மஸ்லீனா என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய்க்கு அந்நாட்டில் ஏகப்பட்ட மவுசு உள்ளது.
 

h



முதலில் தனியாரின் பராமரிப்பில் இருந்த அந்த மரம், அதனுடைய வயது 2 ஆயிரம்  ஆண்டுகளுக்கு அதிகம் என்று தெரிந்த பிறகு அதனை அரசு தன்னகப்படுத்தி கொண்டது. இந்த செய்தி வெளியான பின்பு பலர் இந்த மரத்தைக் காண வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சுற்றுலா தளம் போல் மாறிவிட்டது. இந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் விற்பனையும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்