Published on 20/03/2021 | Edited on 20/03/2021

ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள், உயரமான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.