சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க சில நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பெயர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கொரோனா என்ற பெயரிலேயே மெக்ஸிக்கோவில் பிரபலமான பீர் கம்பெனி ஒன்று உள்ளது. கொரோனா என்றால் இத்தாலி மொழியில் மலர் மகுடம் என்ற பொருள் தரும். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸை தொடர்புப்படுத்தி பீர் நிறுவனத்தின் பெயரும் அடிபடுவதால், இந்த அந்த நிறுவனம் தங்களுடைய பீர் பெயரை மாற்றி தந்தால் பரிசு தொகையாக 100 கோடி தருவதாக தெரிவித்துள்ளது.