Published on 04/04/2023 | Edited on 04/04/2023
பிறருடன் பேசும்போது வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தினால் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது இத்தாலி அரசு.
இத்தாலியில் நாட்டின் முதன்மை மொழியாக இத்தாலிய மொழி இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காகப் பிறருடன் பேசும் பொழுது வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காகவோ அல்லது வணிகம், அதிகாரப்பூர்வ ஆவணம் உள்ளிட்டவற்றில் இத்தாலி மொழியைத் தவிர்த்து ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளைப் பயன்படுத்தினால் 4 லட்சம் ரூபாயிலிருந்து 82 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என இத்தாலி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.