Published on 26/03/2019 | Edited on 26/03/2019
இந்தியா சீனா இடையே பல வருடங்களாக எல்லை பிரச்னை நடந்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

அருணாச்சலின் குறிப்பிட்ட அந்த பிரதேசங்களுக்கு இந்திய தலைவர்கள் செல்லும் போது சீனா தொடர்ந்து அவர்களை எச்சரித்தும் வருகிறது. ஆனால் இந்திய தலைவர்களோ அது இந்தியாவின் ஒரு பகுதி எனவே நாங்கள் செல்வோம் என கூறி வருகின்றனர். இந்த எல்லை பிரச்சனைக்காக இதுவரை இரு நாடுகளும் இடையே 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் அருணாசல பிரதேசத்தினை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடாத 30,000 உலக வரைபடத்தினை சீன சுங்க துறை அதிகாரிகள் அழித்துள்ளனர். வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாக இருந்த இந்த உலக வரைபடங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் முன்னரே அழிக்கப்பட்டுள்ளன.