ஒரு வீட்டில் திருடுவதற்காக வந்த திருடன் ஒருவன் அந்த வீட்டின் படுக்கையறை, கழிவறைகளை சுத்தம் செய்து சென்ற சம்பவம் அமெரிக்காவின் மஸாச்சேட்டஸ் பகுதியில் நடந்துள்ளது.

44 வயதான நேட் தனது 5 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற இவர் வீட்டிற்கு திரும்பிய போது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. இவர் வீட்டின் பின் வாசல் வழியாக வந்த திருடன் இவரது வீட்டில் இருந்த பொருட்களை திருடாமல் வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், வீட்டின் பின் வாசல் வழியாக நுழைந்த திருடன் திருடாமல், அதற்கு பதிலாக கலைந்து கிடந்த எனது வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளான். எனது படுக்கையறை, கழிவறை, எனது மகனின் விளையாட்டு பொம்மைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தியுள்ளான். இது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார். திருடனின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.