Skip to main content

40 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Women passes away in cuddalore district police investigation

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சக்தி நகர் பகுதியில், சாந்தி (40) என்ற பெண் தனியாக வீடு வாடகை எடுத்து, ஏழு மாதமாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகளுக்குத் திருமணம் முடித்த பின்பு, அரிசி வியாபாரம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். தினந்தோறும் காலை வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார்.  

 

இன்று காலை வீட்டில் இருந்து, வெகுநேரமாகியும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது சாந்தி அரை நிர்வாண கோலத்தில், மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். 
 

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்று, விசாரணை செய்த காவல்துறையினர், ரத்தக் கறையுடனான ஒரு சட்டையையும், சாந்தியின் செல்ஃபோனையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மோப்ப நாய் அர்ஜூன் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தடவியல் நிபுணர்களும் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

 

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். சாந்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா, திருட்டுக்காகக் கொலை நடந்ததா, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்